Tuesday, January 23, 2007

அன்புக் காதலியே!

உனது ஒவ்வொரு மௌன நொடிகளிலும்
எனக்குத் தான் எத்தனை செய்திகள் !

பேசிக்கொண்டே இருக்கிறாய் நீ
நான் யோசிப்பதை மறந்து !

திடீரென்று கேள்விகேட்க
யோசிப்பதை நான் சொல்ல
சரியான பதில் என்றாய்!

உந்தன் பிறந்த நாளின்று
எனக்கேனிந்த பூமாலை ?
உந்தன் தங்க கரங்களாலெந்தன்
கழுத்தில் செல்லமாய் நீ
சேர்த்தணைக்கும் மகிழவே போதுமே !

என் அழகியே!

காதலென்றால் என்னதென்றறியாத
என் மனதினருகே வந்தமர்ந்தாய் - ஒரு
முத்தமும் நீ தந்தாய்
இனியெனக்கென்ன அறியவேண்டும்
இன்று நான் காதலின் பலகலைக்கழகம்!

உந்தன் கார்கூந்தலில் எந்தன்
செல்ல ஸ்பரிசம்
இனி பூமிப்பெண்ணிற்கேது தாகம்?

இருவர் நாம் சேர்ந்ததுமே
காதல்ப்பூமழை !
உலகம் மாறியதே - எங்கும்
காதல் பூந்தோட்டம்!

Thursday, January 18, 2007

என் இனிய நண்பர்களே!

பல வருட நண்பனவனை
முதல்முறையாய் இன்று கண்டேன்

மனம் விட்டு பேசினோம்
அவன் நிலை கேட்டதுமெந்தன்
மனநிலை கவலையிலாழ்ந்தது

நண்பனவனின்
முதல் குழந்தை
பிறகு பிறந்த குழந்தை
இரண்டு செல்வங்களும்
மூன்றாம் வயதிலேயே திடீர் மரணம்

பாலைவனத்தில் உழைத்த பணமெல்லாம்
மருத்துவத்திற்கு இரண்டுமுறை அபிஷேகம் செய்தும்
கருணையற்ற மரணம் கொள்ளையடித்ததே - அவனின்
பிஞ்சு பிள்ளைகளினுயிர்களை!

நல்லவன் மிக மிக நல்லவன்
என் நண்பனவன்
அவனுக்கு ஏனோ இந்த சோதனை?

நண்பனவனின் மனைவி
என் அன்பு சகோதரியின்
மன நிலையை நினைத்து கூட
பார்க்க முடியாமல்
கதறி அழுதேன்

அவன் குலம் காக்க
மூன்றாவது குழந்தை
பிறக்கப் போகும் நற்செய்தி
என் மனக்காயத்திற்கு
கொஞ்சம் மருந்திட்டது

அந்த பிள்ளைக்காவது
நீண்ட ஆயுள் கிடைக்க
என்னோடு பிரார்த்திப்பீர்களா
என் இனிய நண்பர்களே !

Wednesday, January 17, 2007

மகிழ்ச்சி


வாழ்வது ஒரு கலை
நல்லாசிரியரை தேடுகிறது வாழ்க்கை
அமைதியற்ற செயலும்
செயலற்ற அமைதியும் தவறே
செயல்கள் யாவையிலும்
அமைதியும் சந்தோஷமும்
நிறைந்திருக்கும் மனமதில்
பொங்கிமகிழும் மகிழ்ச்சி !

கல்லரை செல்லும்வரை - மனித
சிந்தனையின் உயிரோட்டம் நிச்சயம்
அறிவென்ற நதிக்கரைகளை மட்டும்
திடப்படுத்தினால்
வாழ்விலென்றும் அமைதி நிச்சயம் -அந்த
அமைதியில் மகிழ்ந்து மலரும் மகிழ்ச்சி !

சென்றுசேரும் இடத்தை விட
பயணமே மகிழ்ச்சி!

பரிசை வாங்கும் நொடிகளை விட
உழைத்து மகிழ்ந்த மணித்துளிகளில் தான்
ஒளிந்திருக்கிறது மகிழ்ச்சி!

அவன்...

நெஞ்சார்ந்த அன்பால் மனம் திறந்து பேசினான்
அவன் மனதை குத்தியது விமர்சனம்

முட்டாளை அறிவாளியாக்க நெஞ்சுவலிக்க பேசினான்
அவன் மனதை கிழித்தது விமர்சனம்

உறவுகள் மேம்பட தவறுகளை மன்னித்தான்
அவன் மனதை நொறுக்கியது விமர்சனம்

கதறிய தன் மனதின் அறிவுரை கேட்டான்
அவன் அமைதியில் வாழத்துவங்கினான்
அளவோடு பேசுமோர் அதிசய ஊமையானான்!

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments