1989-90-இல் தமிழ்நாடு சட்டப்பேரவை, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்றி வெற்றி கண்டது.
சொத்தில் சம உரிமையான ஐம்பது விழுக்காடு, சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் என்று வரும்போது ஏன் முப்பத்தி மூன்று விழுக்காடாகக் குறைந்து போகிறது? முப்பத்து மூன்றிர்கே வழியில்லை; இனியெங்கே ஐம்பதைக் கேட்க - என்பதா பொறுப்பில் உள்ளோர்களின் விடை?
சொத்தில் சம உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைத் தந்துள்ளது. ஆனால்
சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றதிலும் இந்த இட ஒதுக்கீடு பெண்களில் பலரை வெறும் பொம்மைகளாக்கி அவர்களின் கணவர்களோ, சகோதரர்களோ அதிகாரத்தைத் தவறாகச் செய்து விடுவார்களோ என்று சாதாரண மக்கள் குழப்பமடைவது மட்டுமின்றிப் பயப்படவும் செய்கிறார்கள்.
பெண் உறுப்பினர்கள் சிலரின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் அந்த பதவியின் அதிகாரத்தை அனுபவித்து வெறும் பொம்மைகளாகப் பெண் உறுப்பினர்களை உபயோகப்படுத்துகின்ற நிலை அறவேயில்லை என்றோ இனி வரவே வராது என்றோ சொல்ல முடியுமா?
வங்கியொன்றில் கணவரும், மனைவியும் சேர்ந்து தொடங்கும் சேமிப்புக் கணக்கில் காசோலை புத்தகம் கிடைத்ததும், அதன் நிறைவு செய்யாத எல்லா பக்கத்திலும் மனைவியிடம் கையெழுத்தை முன்னதாகவே வாங்கி வைத்துவிடும் கணவர்கள் பலர் இருக்கும் நம் நாட்டில், பெண்களை அரசியலில் வெறும் பொம்மை வேடமிடவிட்டு, அதிகாரத்தைத் தவறாக, அவர்களின் கணவர்களோ அல்லது சகோதரர்களோ செய்து விடுவார்களோ என்ற பயம் பொதுவாக வாக்காளர்களில் பலரிடமும் உள்ளது.
ஆக இந்தச் சிக்கல் ஒரு கட்சியின் தனிப்பட்ட சிக்கலல்ல; சமூகத்தின் பொதுச் சிக்கல்!
சரி, இந்தச் சிக்கல் சரி செய்ய வழியென்ன? ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் இந்த ஆட்சி, கண்டிப்பாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வாங்கித் தரும் என்பதில் பெரிய அளவிற்கு ஐயமில்லை என்று தான் தெரிகிறது.
ஆனால் இந்த வெற்றி கிடைத்ததும் பெண்களுக்காக வெளியிடும் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் தீர்க்கமான ஆய்வுகள் நடத்திய பின்னரே வெளியிட வேண்டும். பல ஆண்டுகளாகக் கட்சியில் தொண்டாற்றியவரின் மனைவி அல்லது மகள் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதாது. தேவைக்கேற்ப படிப்பு, கட்சியில் ஈடுபாடு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை, நாட்டுப்பற்று, நாட்டின் நலன் கருதி தானாகத் தீர்மானம் எடுக்கும் அறிவாற்றல் போன்ற எல்லாத் தகுதிகளையும் கொண்ட பெண்களையே ஒவ்வொரு கட்சியும் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் சாதி, மதம், இவை மறந்து தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் சமமாகப் பாவித்துச் செயல்படத் தொடங்கினால் நல்ல கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு இருக்கும் சாதிக் கட்சியென்ற அவதூறு கண்டிப்பாக மறைந்து போகும்.
பெண்களுக்கான முப்பத்து மூன்று அல்லது ஐம்பது விழுக்காடு என்ற கணக்கை நிரப்பி விட்டால் போதுமென்ற எண்ணமில்லாமல் - கட்சிக்காக, நாட்டிற்காக, நல்ல கொள்கைகளுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முன்வரும் பெண்களைத் தேர்வு செய்தால் பெண்கள் இட-ஒதுக்கீடு கோரிப் போராடிக் கிடைத்த வெற்றி, உண்மை வெற்றியாக மலர்ந்து மகிழும்.
தோழமையுடன்
என் சுரேஷ்
6 comments:
அன்புத்தம்பி சுரேஷ்,
நட்சத்திரமாகிவிட்டாய்
தமிழ்வானத்தில்
நானுமந்த ஒளியில் நனைகிறேன்
அன்பு எனும் ஆகாயத்திலே
அழியாமல் ஒளிவீசும் நட்சத்திரமே
கருணை என்னும் ஒளி கொண்டு நீ ஏற்றிய கடமை விளக்குகளால் ஒளிபெற்றோர் பலரே
தம்பியுந்தன் ஆற்றலுக்கு
இன்னும் பல
தரணிபோற்றும் வெற்றிகளை
நீ அடைவாய்
தமிழன்னை தந்த நல் சொந்தங்களோடு சேர்ந்து
தவறாமல் நானும் மகிழ்ந்து வாழ்த்திடுவேன்
நட்சத்திரங்களின் நாய்கனே நீ வாழ்க! நின் புகழ் வாழ்க !
நெஞ்சில் உன் அன்பைச் சுமந்தபடி வாழ்த்துகிறேன்
பாராட்டுக்கள், மனமகிழ்வுடனான வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
Vaazthukkalum Paaraatuthalum....
endrendrum anbudan,
Anbu
Up above the World, So HIGH
Like a Diamond in the Sky
Thats my 'Super'star Suresh. :) And he has lots of megastars around him in the sky - my Albert annan, Sakthi annai(அன்னை), Madhumitha amma, eternally-lovable Bala, the name called 'ANBU', Karunai-migu Aruna, ......
Can he ask for more or what?
All the best.
love all serve all (- b. viswanathan)
Dear Suresh,
You are already a STAR :) Congrats !
enRenRum anbudan
BALA
Congratulation. Good thing. Keep it up. With warmest regards. Keep it up. AJ
அன்பினிய சுரேஷ்,
"தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறவன் உயர்த்தப்படுவான்" என்பதற்கொப்ப
புழுதியிலிருப்பவனை நட்சத்திரமாக்குகிறது இறைவனின் கிருபை! என்று
போட்டிருக்கிறீர்கள். என் அடிமன வாழ்த்துக்கள் சகோதரனே!
"சேவை"களுக்கெல்லாம் சேவகர் என்ற பட்டத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கலாம்.
நான் தமிழக முதல்வராக இருந்தால் "சேவை வாரியம்" என்ற ஒன்றை அமைத்து
அதன் நிரந்தரத் தலைவராக ஆக்கிவிடுவேன்!
என்றுமான அன்புடன்,
ஆல்பர்ட்.
Post a Comment