Wednesday, April 2, 2008

அன்பென்ற மழையிலே...



அன்பென்ற மழையிலே...

புத்தகத் தலைப்பே இதமாய் வருடிகிறது. வறண்டு போன நிலத்திலிருந்து புறப்படும் வெள்ளி நீரூற்றுபோல் வருகிறது கவிதை. கற்பனை, மொழிபலம் ஆகிய தளங்களில் நின்று கவிதைக் கோபுரம் கட்ட எத்தனிக்காமல் தன் ஆழமான ஆத்ம தரிசனங்களையும் அத்தரிசனங்களின் விகசிப்புகளையும் கவிதையாக்கியுள்ளார் என்பதே என்.சுரேஷ் அவர்களது இப்படைப்பின் தனிச்சிறப்பாகக் காண்கிறேன்.

காதலும் வாழ்வின் ஏமாற்றங்களுமே கவிதையின் ஒட்டுமொத்த பாடுபொருட்களாய் நிற்கும் இக்காலத்தில், காலத்தை வென்ற இறைமகன் இயேசுவை கவிதையின் தலைவனாக்கியுள்ளார் என். சுரேஷ்.

மீட்பின் கவிதையாய் மனுவுருவெடுத்த அவரை தன் ஆத்ம வீணையால் மீட்டியுள்ளார். அந்த மீட்டல்களில் தன்னுள் சுருங்கிப் போகும் ஆன்மீகம் இல்லாமல் தன்னைச் சுற்றின சமூகம் - மக்கள்
மீதான அக்கறையும் அன்பும் வெளிப்படுகின்றதென்பது சிறப்பு.

"நான் இந்த பூமியில் வாழும் காலம்
உப்பாகவும்
வெளிச்சமாகவும் இருக்க
உமது கிருபை தாரும்"

என்ற வேண்டுதலில் அந்த அக்கரையின் நேர்மை தெரிகிறது.

இறைநம்பிக்கையாளர் எதிர்கொள்ளும் இயல்பான முரண்பாடுகளையும் அக உளைச்சலால் தரும் கேள்விகளையும் தத்துவத் தெறிப்போடும் நெகிழ்வோடும் கையாளுகிறார் சுரேஷ்.

சூரிய வெளிச்சமும்
நிலாக்குளிரும்
எல்லோருக்கும் இருக்கையில்
உமது அன்பு மட்டும்
ஒரு கூட்டத்தினருக்கே
ஒருபோதும்
ஒதுக்கப்படுவதில்லையே"

என்பதில் கேள்வியை விட ஆழமான ஒரு பதிலையே பார்க்கிறேன்.

இறைவன் தன்னை நேசிப்பதை நெஞ்சார உணர்ந்த நாளை, தன் வாழ்வின் அழகிய நாளாய் அறிவிக்கிறார் கவிஞர். பழைய ஏற்பாட்டு சங்கீதக்காரனின் உணர்வு நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிற சுரேஷ் இன்னும் நிறைய எழுதவேண்டும் - இறை அன்பை இன்தமிழில்
பலருக்கும் அறிவிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்

Rev.Fr.ஜெகத் கஸ்பர் ராஜ்

2 comments:

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

அன்புள்ள சுரேஷ் அவர்களே

நீர் ஒரு உண்மையான படைப்பாளி என்று புரியவைத்துவிட்டீர்கள்
ஒவ்வொரு படைப்பாளியும் ,இதே போல் நல்ல படைப்பாளிகளை,அவர்களின் படைப்புகளை பாராட்ட ஆரம்பித்தால்
நிச்சயமாக படைப்புகள் மட்டுமல்ல படைப்பாளிகளும் வளருவார்கள்

கற்றோரை கற்றோரே காமுறுவர் என்னும் இலக்கணத்துக்கு பாதை போட்டிருக்கிறீர்கள்
ராமாயணத்திலே சர்வ வல்லமை படைத்தா ஆஞ்ஜனேயன் அடக்கமாக இருப்பானாம்
அது போல முழுமை பெற்ற நீர்
அடக்கமாக இருக்கிறீர்
கற்றரிந்த புலவர்களும் கல்வியில்லா
மூடர்களும் தன்னடக்கம் மிகக் கொண்டே தான் வணங்கி இருக்கின்றார்,அமைப்பெல்லாம் ஒன்றேதான் ,உள்ளடக்கம்தான் வேருபாடு
என்கிற என்கவிதை ஞாபகம் வந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ

N Suresh said...

மரியாதைக்குறிய கலைஞர் பெருமகனே, திரு தமிழ்த்தேனே!

உங்களுடைய பின்னூட்டங்களால் நான் இனி முன்னேறுவேன் என்ற திடமான நம்பிக்கையில் மகிழ்கிறேன்.

மிக்க நன்றி!

தோழமையுடன் என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments