Friday, August 3, 2007

மௌனம்



மௌனம் அரங்கேறிய அவ்வீட்டில் - சில
குழந்தைகளின் சத்தம் மட்டும்....

அதீத சோகத்தால் மனம் விட்டு
அழத்துடிக்கும் நண்பன்...

அழுது வரண்டுபோன கண்களோடு
அவனினிரு பிள்ளைகள்...

அந்த பிள்ளைகளின் பார்வைகள் கேட்கும்
பல்லாயிரம் கேள்விகளுக்கு பதிலின்றி
அங்குள்ளோர் எல்லோரும்...

கவலையைத் தேற்றவந்து கவலையிலாழும்
சொந்தபந்தங்களும் நண்பர்களும்...

நிர்பந்தமாயந்த வீட்டிற்குள்ளெனை
அழைத்துச் சென்றயென் நண்பன்
ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது போலிருக்கும்
அவனின் தேவதையைக் காட்டி
கதறிச்சொன்னான்..

"மனைவி இறந்து விட்டாள்"

4 comments:

துளசி கோபால் said...

பதிவுலக நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவி இறந்ததுட்டாங்க. அந்த சோகத்தில் இந்தக் கவிதையைப்
படிச்சதும் கண்ணும் மனசும் கலங்கிருச்சு.

Unknown said...

ரொம்பவும் கவலையாக இருக்குங்க சுரேஷ்!
இறுதி வரியில் மனம் கனத்து விட்டது.

அன்புடன்,
நா.ஆனந்த குமார்

சக்தி சக்திதாசன் said...

அன்புத்தம்பி சுரேஷ்,

இதயம் பொங்கும் சோகத்தை
இனிமை பொங்கும் தமிழ் கொண்டு
இத்தனை மெத்தனமாய்க் கூறும்
இத்தம்பியின் கவித்திறன்
காயம் கொண்ட நெஞ்சைக்
கனியவைக்குது சோகத்தினூடு
கலைஞர் அன்றொரு நாள் சொன்னார்
கவியரசர் கண்ணதாசனுக்கு
நீயென்னைத் திட்டும் போதெல்லாம்
நான் கண்டேன் தாலாட்டு உன் தமிழில் என்று
அது போல சோகத்தை எடுத்துச் சொல்லி எம்
அழுகையை அணை உடைக்கப்பண்ணிணாலும்
தமிழ் கொண்ட செழுமை கண்டு
தம்பி உமைப்பாராட்டும் மனம்

இழந்த சொந்தத்தை எண்ணி
இதயம் குமுறுவோருக்கு
ஈடு சொல்ல முடியாது வார்த்தைகளில்
இணைந்துகொள்வோம் அவர் சோகங்களில்

அன்புடன்
சக்தி

Anonymous said...

அன்புடையீர்,
கனிவான கைகுவிப்பு!
இனிய நல் வாழ்த்துகள்!
தங்கள் படைப்புகள் சிலவற்றைக் கண்டேன்!
மனித நேயம் ஊடுருவி இருக்கும் அவற்றைப் படித்து மகிழ்ந்தேன்.
வாழ்க தங்கள மனித நேயம்!
வளர்க தங்கள் படைப்பாற்றல்!
தங்களைப் போன்றவர்கள் படைத்துக்கொண்டே இருக்கும் வரை
தமிழினி சாகவே சாகாது!

அன்புடன்
பெஞ்சமின் லெபோ
சர்சல் (பிரான்சு)

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments