அன்புள்ள திருமதி மாலா,
"இன்றைய தமிழகம்" என்ற தலைப்பில் பெயர் சொல்லாத ஒரு நபரின் கட்டுரை உங்கள் கணினியில் கண்டதும் அதை எனக்கு அனுப்பின உங்கள் அன்புள்ளத்திற்கு நன்றி.
எனது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
இலவசங்களை மக்களுக்கு கொடுப்பதால் இந்த சமூகம் நாசமாக போய்விடும் என்ற கருத்தைக்கொண்டு இந்த கட்டுரையாளர் எழுதியுள்ளார்.
இன்றைக்கு ஒரு கிலோ அரிசிக்கு 28 முதல் 45 வரை விலை ஏறியுள்ளது. ரேஷன் அரிசியை மட்டுமமே நம்பி உள்ள மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்துள்ளதால் இன்று பட்டினி மரணங்கள் இல்லாமல் போனது என்பதை மறுக்க முடியுமா?
கணினி முன் அமர்ந்து உலகத்தை பார்க்கும் நமது எழுத்தாளர்கள் வறுமையின் மேகத்தில் மூழ்கின சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று பார்த்தால் உண்மை விளங்கும்.
வண்ணத்தொலைக்காட்சி என்றால் என்ன என்றே தெரியாதோர் இந்த தமிழ் நாட்டிலேயே எத்தனையோ லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால, அதன் எண்ணிக்கையை அறிந்தால் யாரும் அதிர்ச்சி அடைவார்கள்.
பொழுதுபோக்கு என்பது வறுமையால் பாதித்தவர்களுக்கு வேண்டாம் என்றால் எப்படி? அவர்களும் இந்த உலகம் என்னவென்று அறியட்டும். இதன் அடிப்படையில் தான் வண்ணத்தொலைக்காட்சி கொடுத்துள்ளது இந்த அரசு.
இன்றும் முன்னால் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்து வருகிறார் என்று என்னிடம் சொன்ன வயதானவர்கள் என் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றனர்.
மருத்துவக்காப்பீடு என்ற ஒரு விஷயத்தை காப்பீடு நிறுவனங்கள் இதுவரை பெரிய அளவில் எல்லோருக்கும் சென்றடையும் படி பரப்புரை செய்யவில்லை என்பது சத்தியம். அடிப்படை ஏழைக்கும் மாரடைப்பு போன்ற ஆபத்தான் நோயகள் வரலாம். அப்போது அவர்கள் என்ன தான் செய்வார்கள்?
ஒன்று உயர்ந்த வட்டிக்கு கடன் வாங்குவார்கள், அல்லது இருக்கும் சொத்தை விப்பார்கள் அல்லது மரணப்படுவார்கள். ஆனால் தற்போது மக்களுக்கு அரசு அளித்துள்ள மருத்துவக்காப்பீடு திட்டத்தால் பலகோடி தமிழ்மக்கள் பயன்படுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்ன்ர் இதே திட்டத்தை திரு ஒபாமா, அமெரிக்காவில் ஆரம்பித்துள்ளார் என்பதை மிகவும் சௌகரியமாக பலர் மறந்து விட்டது வருத்தத்திற்குறியது.
தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டுவருகின்ற எல்லா திட்டங்களையும் மத்திய அரசும் மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.
நான் திமுக கழகத்தின் உரிப்பினரல்ல; ஆனால் பசி என்றால் என்ன என்று அறிந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு பயன்கள் பல கிடைத்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் தமிழகத்தின் வளர்ச்சி கண்டு உலகமே வியக்கும்போது நான் அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியுமா?
இதெல்லாம் ஓட்டு வாங்கத்தான் இந்த அரசு செய்கிறது என்று வாதாடுவோரிடம், அதில் தவறென்ன என்று கேட்காமலும் இருக்க இயலவில்லை.
வேலையில்லா கொடுமை தீர்க்க அரசு வேலைவாய்பு நிச்சயப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் ஏழைப்பெண்கள் பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமான உணவு மற்றும் மருந்தில்லாமல் இறந்தே போகும் கொடுமை ஒழிக்கத்தான் பிரசவம் முடிந்த தாய்மார்களுக்கு இந்த அரசு பணம் கொடுத்து உதவுகிறது.
உணவு இல்லை என்பதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு கொடுப்பது நிச்சயம் பாராட்ட வேண்டின ஒன்று. இது காமராஜர் ஐயாவின் காலம் முதல் தொடர்ந்து செய்து வருகின்ற அரசின் சேவை!
ஏழைகளுக்கு இலவச புத்தகம், படிப்பு, சீறுடை, சைக்கில், பஸ் பாஸ் இவைகள் கொடுப்பதில் தவறென்ன? ஏழ்மையால் கல்வி கற்க ஏற்படும் தடைகளை தவிற்க வேரென்ன வழி?
பெண் பருவமடைந்தால் அதை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டின வறுமைநிலை ஏழைகளுக்கு வேண்டாமென்ற நல்லெண்ணத்தால் தான் அரசு 2500 ரூபாய் ஏழைகளுக்கு கொடுத்து வருகிறது. ஏழைகளுக்கும் உணர்வுகளுண்டு. ஏழை வீட்டு பிள்ளைகளுக்கும் மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டும். இது தமிழர்களின் மரபு. ஏழைப்பெண்களின் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்றால் அந்த கவலையின் நிலையை அறிய சில காலம் கிராமத்தில் வாழ்ந்தால் யாருக்கும் உணரமுடியும்.
ஒரு கிராம் தாலி கூட இல்லை என்பதால் திருமணங்கள் பல நடக்காமலே போகின்றன. ஏழைகளுக்கு ஒரு பவன் தாலி கொடுத்து திருமண உதவி செய்து கொடுக்க அரசு முன்வந்ததை பாராட்ட ஏழ்மையின் வலி அறிந்திருக்க வேண்டும், மற்றபடி பாராட்ட வேறெந்த தகுதியும் தேவையில்லை.
இலவசத்தை கைய்யூட்டு என்றும் பிச்சையென்றும் கொச்சைப்படுத்துவது மாபெரும்
தவறு. ஏழ்மையிலிருந்து மேல்வர இருக்கும் சமுதாயத்திற்கு ஓர் நல்ல அரசு செய்ய வேண்டின கடமையைத் தான் இந்த அரசு செய்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலவசம் தவறு என்று போதனை செய்வோர் எத்தனை பேர் தன்னிடம் இருக்கும் சொகுசுக்களை ஏழைகளோடு பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள்?
இலவசம் தேவை இல்லை என்றால் இத்தனை இலவசங்களை பெற மக்கள் முன் வருவார்களா? இத்தனை திட்டங்கள் தான் வெற்றிபெற்றிருக்குமா?
"எதையும் எதிர்போம்" - கொள்கையாளர்கள் மீது பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய இயலும்?
புதிய சட்டப்பேரவை கட்டிடம், சிறந்த நூலகம், தேவைக்கேற்ப பாலங்கள்,
நிலமில்லாதவர்களுக்கு நிலம், ஏழைகளுக்கு மேல் குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத
சலுகைகள், கடன் ரத்து என நீண்டு கொண்டே போகும் இந்த
நற்பணிகள், ஐந்தாண்டுகளுக்கு முன்னமே சாதனையாக செய்து முடிக்கும் நேரமிதில்
முதலமைச்சரை மட்டுமல்ல, அவரோடு பணிபுரியும் மந்திரிகள், அரசு அலுவலர்கள் என ஒட்டு மொத்தமாக இந்த தமிழக அரசையே பாராட்டும் ஓர் நல்ல மனம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை, பிரார்த்தனை!
இறைவன் நல்லவர், நல்லவர்களான தமிழர்களுக்கு இந்த உண்மையின் அழகை அவர் வெளிச்சமிட்டு காட்டுவார் என்று நான் நம்புகிறேன்.
பாசமுடன்
என் சுரேஷ்
No comments:
Post a Comment