Friday, May 25, 2007

ஏங்கே நீ....

உதயமே
ஏன் இன்னமும் தாமதம்!

கவலை நிறைந்தும் அழத்தெரியா
வானம் நான்!

இறக்கைகளை இழந்த பறவை தான்
நீயில்லாத நான்!

புதிய பெயர்


மனைவியின் புதிய பெயர்
"தாயீ"
தாயின் புதிய பெயர்
"கெழவி"

ரோஜா!

தந்தையர்


தினம்!



தகப்பன் இருந்தால் சிகப்பு ரோஜா!



இறந்திருந்தால் வெள்ளை ரோஜா!



அனாதைக்கு எந்த நிற

ரோஜா?







Monday, May 21, 2007

பூஞ்சோலை...


புன்னகையை மறந்து விட்டது- எங்கள்
பூஞ்சோலை கிராமம்

மழை பொழிய மறுக்கிறது
முகில்களெல்லாம் இங்கு மட்டும்

தென்றலும் தொலைந்து போனது
மரங்களெல்லாம் சிலைகளாகிட

கோபத்தின் வெப்பம் தொடர்கிறது
சூரியன் கடலிற்குள் மூழ்கினபின்னும்

வெப்பம் நிலவுகிறது
நிலா மழையிலும்

தண்ணீர் வேண்டாமென்ற கோஷமிடுகிறது
வறண்ட நிலங்களெல்லாம்

என்னுயிர் காதலியே!
எங்கள் மண்ணிலுந்தன்
மலர்பாதம் முத்தமிட்டால்
பூஞ்சோலை கிராமம்
பூஞ்சோலையாகும்!

Sunday, May 13, 2007

பார்வை அறியாது...





எந்தன்
மௌனத்தின் செய்தியுந்தன்
பார்வை அறியாது!

மெல்லிய குரலின் கோபமுந்தன்
காதுகள் கேட்காது!

ஸ்பரிசத்தின் தேவையுந்தன்
மேனி உணராது!

சுருங்கிக் கிழிந்த
ஆடைகளுந்தன் கனிவைத் தீண்டாது!

வரண்டுபோன கண்ணீரின் ஆவியுந்தன்
நாசிக்குச் செல்லாது!

வாடின மலர்மனதின் கவலையுந்தன்
நினவுக்கு எட்டாது!

கணவனே!
மதுவிற்கு அடிமையுந்தன்
கொடுமை தாங்கி மன்னிக்க
இனிமேலும் நான் கோழையல்ல...

புறப்படுகிறேன்
மரணத்தை நோக்கியல்ல..
இனிமேலாவது வாழ்வதற்கு!

Friday, May 11, 2007

நீ சொல்...


எந்தன்
கவிதைகளில் இசையானாய்
சிந்தனையில் தெளிவானாய்
கனவில் நிஜமானாய்
மௌனத்தில் மொழியானாய்
புன்னகையில் அழகானாய்
வானத்து நிலவானாய்!
உந்தன்
மரணமதில் மட்டுமேன்
தனிமையானாய்?
எந்தன்
வாழ்க்கையில் கவலையை
அறிமுகப்படுத்தவா?
என்னுயிர் கணவனே....
உனது பாச நினைவுகளால்
மகிழ்ந்து கரைகிறேன் - உந்தன்
விதவை நான்!







Thursday, May 10, 2007

தயவாக நேசியுங்கள்....











தண்ணீருக்காய் வெடிக்கப்போகும்

மூன்றாம் உலகப்போர் நின்றுவிட


பூமித்தாய் தண்ணீர்மேல்

பிணமாய் மிதப்பதை தடுத்துவிட


எங்களை தயவாக நேசியுங்கள்!



கண்ணீருடன் யாசிக்கிறேன்

நான் மரங்களின் பிரதிநிதி


தமிழகத்துச் செடி!


Wednesday, May 9, 2007

அமுதசுரபியில் எனது கட்டுரை

கடந்த மாதம் (மே மாத) அமுதசுரபியில் வெளியான எனது கட்டுரை....

Tuesday, May 8, 2007

காதலிக்கு...


உன்னை விட
உன் மனதையும்
என் கண்ணீர் துடைத்த
உந்தன் விரல்களையும்
நன்றியால் நேசிக்கிறது
பார்வை இழந்த என்
காதல் கண்கள்!

Monday, May 7, 2007

கிறுக்கல்...


கொஞ்சமும் இடமில்லாமல்
கிறுக்கின காகிதம் உந்தன் மூளை!
இனி உனக்கு
நான் எழுத மாட்டேன்
காதல் கடிதம்!
குழம்பின உந்தன் நினைவுகள்
என்னை சுத்தீகரித்து மகிழ்கிறது!
எந்தன் பார்வையில் மலர்ந்தவளே
எந்தன் கடலின் பார்வையிலிருந்து
பிரிந்து போகும் நதியுந்தன்
வளைவுகளிலும் முட்டாள் ஆணவம்!
உனக்கு ஒரு நாள் தெளிவு வரும்..
அன்று வரை காத்திருப்பேன்
என்றுமுந்தன் காதலன் நான்!

Sunday, May 6, 2007

மன்னிப்பு


உபதேசிக்க மிகவும் எளிது
செயல் படுத்த மிக மிக கடினம்!
தண்டனை கொடுக்காமலிருப்பது மட்டுமல்ல
மனதாற மறப்பதே மன்னிப்பு !

காதில் முத்தம்



காதில் என்னை
முத்தமிடச் சொன்னது
எந்தன்
காதலின் காதில்
நீ
பூ சுற்றத்தானோ!