எந்தன்
கவிதைகளில் இசையானாய்
சிந்தனையில் தெளிவானாய்
கனவில் நிஜமானாய்
மௌனத்தில் மொழியானாய்
புன்னகையில் அழகானாய்
வானத்து நிலவானாய்!
உந்தன்
மரணமதில் மட்டுமேன்
தனிமையானாய்?
எந்தன்
வாழ்க்கையில் கவலையை
அறிமுகப்படுத்தவா?
என்னுயிர் கணவனே....
உனது பாச நினைவுகளால்
மகிழ்ந்து கரைகிறேன் - உந்தன்
விதவை நான்!
அன்பு சுரேஷ் மிக அருமை அந்த விதவையின் உணர்வுகள் சொல்ல இயாலாது வாழ்த்துக்கள்
ReplyDeleteMaranam migavum kodiyathu. En unarvil ella bandhagalai vida kanvanai vittu manaivi allathu manaivi vittu kanvan uyir pirivathu migavum kodumai.
ReplyDeleteArumaiana uravu kavidhai.
All the best!
VS, Chennai
கணவனை இழந்தார்க்கு காட்டுவது இல்! என்கிறது சிலம்பு. யாருக்கும் ஆறுதல் கூறலாம். எதற்கும் இழப்பீடு தரலாம்.
ReplyDeleteஆனால், கணவனை இழந்தார்க்கு? இழப்பீடே கிடையாது!
கரைந்த மனத்தை மீட்டெடுக்க முடியாது.
இழந்த காதல் இரந்து பெறவும் முடியாது.
இரங்கி வருந்துகிறேன்.
முனைவர் ஐயா,
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.. மிக்க நன்றி
அன்புடன்
என் சுரேஷ்
VS & விசாலம் அம்மாவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி பல..
ReplyDeleteஅன்புடன்
என் சுரேஷ்