நகைகள் தன்னை அணிந்த
மகிழ்ச்சியில் - அவள்
கண்ணிமைகளை மூடாமல்...
தன்னைவிட தனது நகைகளை
அதீதமாய் நேசிக்கும் ஒருவளோடு
வாழ்வதெப்படி என்ற பயத்தில் - அவன்
கண்ணிமைகளைத் திறக்காமல்...
இருவருக்குள்ளும்
மௌனம் அரங்கேற..
இதெல்லாம் நமக்கென்று - என்ற
ஆதங்கத்தில் அநேக பார்வைகள்
கனவுகளுக்குள் செல்ல -அந்த
கனவுகளில் சில கவலைகளுக்குள்ளும்
சில மகிழ்ச்சிகளுக்குள்ளும் கரைந்தன!
அன்றாட வாழ்வில்
எல்லோரும் செய்து வரும்
மாபெரும் தவறுகளில் ஒன்று
வியப்பதும் வியக்க வைப்பதும்!
//வியப்பதும் வியக்க வைப்பதும்//
ReplyDeleteதவிர்க்க முடியாத தொடரல்கள்
அன்றாட வாழ்விலே!
//தன்னைவிட தனது நகைகளை
ReplyDeleteஅதீதமாய் நேசிக்கும் ஒருவளோடு
வாழ்வதெப்படி என்ற பயத்தில் - அவன்
கண்ணிமைகளைத் திறக்காமல்...//
மணமுறிவு அதிகரிப்பது இதனால்தான்