இளமையில் வறுமை
பசிக்கு உணவு பாதி!
ஓரளவு படிக்க ஆசை
நிறைவேறவே வழியின்றி
அதில் பாதி!
அடிப்படை
குடும்பத்தேவைகள்
நிறைவேற்ற வழியின்றி
கவலைக்குள் அதில் பாதி!
உறக்கம் வாழ்க்கை சிரிப்பு என
ஆயிரமாயிரம் பாதிகள்...!
இந்த லட்சணத்தில்
முதலாளியின் திடீர் அறிவிப்பு
"
எல்லோருக்கும்
இந்த மாதத்திலிருந்து
சம்பளம் பாதி!"
பாதிபாதியாக சொல்லி வந்த
ReplyDeleteமுழு உண்மைகள் கவிதை முழுமையுறுகையில் சொன்ன பாதி
கொடுக்கிறது ஒரு சுவாரஸ்யம்
கவிதைக்கு ஆயினும்
கொடுக்காதே அது சுகம் வாழ்க்கைக்கு
என எண்ணுகையில் எழுவது பெருமூச்சே!
நல்ல கவிதை சுரேஷ். வாழ்த்துக்கள்.
vaalthukal
ReplyDeletehttp://www.kovaikkavi.woedpress.com