Monday, January 7, 2008

மகிழ்கிறது


உனக்கு காதல் கடிதமெழுதும்
ஒவ்வொரு பொழுதும்
என்னில் புத்துயிர்பெற்று
மகிழும் நம் காதல்
உனைக்கண்டதும்
மௌனத்தில் மகிழ்கிறது

6 comments:

  1. மௌனம்
    உங்களுக்கு ரொம்ப பிடித்த வார்த்தையா?
    ரொம்ப நல்லா எழுதுறீங்க!!!
    அருணா

    ReplyDelete
  2. காதலர்கள் சந்திக்கும் போது காதல் மௌனமாகத்தான் இருக்கும். அருமையான எளிமையான கவிதை. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கவிதை நன்று...
    திரு.சுரேஷ்.

    ஒரே ஒரு எழுத்துப் பிழை.
    புத்தியிர்= புத்துயிர்.

    நீங்கள் ஒரு professional எழுத்தாளர்.

    உரிமையோடு இதைக் குறிப்பிடுகிறேன்..

    உங்களது "என் இனிய கவிதைகளே" நூலை நான் வாசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. அன்பினிய சாம் ஐயா,

    எழுத்துப்பிழை நேர்ந்ததற்கு வருந்துகிறேன். எழுத்துப்பிழையை அன்போடு எடுத்து சொன்ன உங்கள் அன்பு உள்ளத்தை போற்றுகிறேன். உடனடியாக திருத்தம் செய்து விட்டேன்.

    உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.

    என் இனிய கவிதைகளே.. நீங்கள் வாசித்ததை அறிந்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

    மிக்க நன்றி ஐயா

    பாசமுடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  5. ஆம் அருணா,
    எனக்கு மௌனத்தை மிகவும் பிடிக்கும்
    அது என்னிடம் பேசிக்கொண்டேயிருக்கும் என்பதால்

    நன்றி அருணா

    ReplyDelete
  6. நன்றி சீனா

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...