Thursday, January 31, 2008

வானத்துக் குழுமம்


வானத்துக் குழுமத்தின் மௌனம்
சில கிளிகளின் பாடல்களால்
சமாதானப்படுகிறது!

வானத்தை நேசிப்பவர்களால்
வானத்தை அடைக்கத் தடை
பலன்பெற்று சேவைசெய்தலை
சௌகரியமாய் மறந்தபின்னும்!

சுயமோகத்திற்குள் புதைந்து
விலாசமில்லா மோகத்தால்
தன்னை வாசிக்க வரும்
நட்சத்திரங்களின் எழுத்தைக்காண
வானத்தின் ஏக்கமேனோ
மௌனத்தில் கரைகிறது!

இதுவும் கடந்து போகட்டும்
முன்கண்ட வெற்றி
மீண்டும் தொடர்வது நிச்சயமென்ற
மனநிலையில் வானத்தின் பார்வை!

அதோ அங்கே மேகமூட்டத்தை
கவலையின் தென்றலொன்று முத்தமிட்டு
ரகசியமாய
அழுது கொண்டிருக்கிறதே!

வானமென்றும் வானம் தான்
புகைப்படங்களைக் கண்டு
சிரித்துக்கொண்டிருக்கும்
நிஜமான வானம்!

2 comments:

  1. //தன்னை வாசிக்க வரும்
    நட்சத்திரங்களின் எழுத்தைக்காண
    வானத்தின் ஏக்கமேனோ
    மௌனத்தில் கரைகிறது!//

    ரொம்ப நல்லாயிருக்கு சுரேஷ்!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. நன்றி அருணா

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...