அவளையே
நினைத்து உருகுகையில்
அவளே வந்தாள் - ஆகா
இனியேது கவலையென்றது
அவனின் உள்ளம் பாவம்!
அவளின் ஆணவப் பார்வையோ
கோடீஸ்வரனின் துணையிருக்க
தனக்கேது கவலையென்றது!
காதல் என்ற உண்மையை உணராதவள்
தாலி என்ற புதிய தங்கத்துண்டிற்காவது
மரியாதை செலுத்தட்டுமே என
வாழ்த்தினது அவனின் அன்புள்ளம்!
காமத்தால் கொச்சைப்படுத்தியும்
பொருளாதார எடைமேடையால்
தரம் பார்த்தும்
தன்னை அசிங்கப்படுத்தி மகிழும்
காதலை அறியா பல காதலர்களின்
இன்றைய விளையாட்டால்
கவலையில் வாடுகிறதே காதல்!
//காதலை அறியா பல காதலர்களின்
ReplyDeleteஇன்றைய விளையாட்டால்
கவலையில் வாடுகிறதே காதல்!//
காதலுக்கே கவலையா? புதுமையான எண்ணங்கள்!
அன்புடன் அருணா
நன்றி அருணா
ReplyDelete