மழைத்துளியொன்று
எனனக்காண வருவதாய்
தென்றல் சொல்லிட
காத்திருக்கிறேன்
என்னை நனைக்காமலும்
அதை என்னில் கரையாமலும்
பாதுகாத்து
பேசிக்கொண்டிருக்க!
அறியாமையால் அன்று
குட்டை நீர்த்துளி நான்
தீர்த்தமாகத் துடித்து
மழைத்துளியோடு கரைய நினைக்க
அது
மழைத்துளியின் அகத்தை
வேதனைப்படுத்தியதாய் அறிந்து
இன்றும்
வேதனையில் என்னகம்!
மன்னித்தாலும் மறந்தாலும்
பரிகசித்துக் கொண்டிருக்கிறது
அதன் வடுக்களின்றும் -ஆனால்
நாளாக நாளாக அவை
மறைந்து கொண்டுவருவதால்
மனதிலொரு சமாதானம்!
பரிசுத்த மழைத்துளி ஒரு
சிப்பிக்குள் வாழ்வுபெற்று
முத்தாய் மலர்ந்திட
காத்திருக்கிறது
அந்த தூரத்து தோணியில்
என் இதயத்தின் நினைவுகள்
//மழைத்துளியொன்று
ReplyDeleteஎனனக்காண வருவதாய்
தென்றல் சொல்லிட
காத்திருக்கிறேன்//
//பரிசுத்த மழைத்துளி ஒரு
சிப்பிக்குள் வாழ்வுபெற்று
முத்தாய் மலர்ந்திட
காத்திருக்கிறது//
மழையும்,மழைத்துளியும் எங்கிருந்தாலும் அந்த வரிகளைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை எனக்கு இங்கேயும் அதுவே!!என்னைக் கவர்ந்தது!!!
அன்புடன் அருணா
அன்புள்ள அருணா,
ReplyDeleteஅழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி