வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல
புரட்சியில் வெற்றி காண வேண்டியவை!
ஆனால்…
அதே புரட்சி வார்த்தைகளால்
நாடுகள் பல விடுதலை அடைந்தும்
சுதந்திரம்
அடுத்த அதிகாரத்திற்கு
அடிமையாகிறதே!
தங்களின் கூர்மை தந்தங்களை மறந்து போய்
மரத்தடிகளை சுமக்கும் யானைகள் கூட
மனித அடிமைகளைக் கண்டு
கவலைப்படுவதுண்டு
பரிகசிப்பதுமுண்டு!
இது தான் சம்பளம்
பிடிக்கவில்லை எனில் வெளியே போ - என
கர்ஜிக்கும் அக்னி வார்த்தைகளால்
கவலையில் எரிகிறது
ஏழை அடிமைகளின்
வயிறும் சுயமரியாதையும் அடுப்பும்!
இன்னமும் உலகில்
எத்தனை கோடி அடிமைகள்!
அழுது தீர்க்க வேண்டியவைகள் தானா
ஏழைகளின் ஆயுட்காலம் ?
தவறுகளை தவறாமல் நியாயப்படுத்தி
ஏழ்மைக்கு மீண்டும்
ஏழ்மை கொடுத்து அடிமைப்படுத்தி
மகிழும் அதிகார துரோகிகள்
தங்கள் தவறுகளை உணரும் நேரம்-வாழ்க்கை
கடலைக் கடந்த மீனாகத்
துடிக்குமென்பதை அறியாதவர்கள்!
தெயவமாக வேண்டாம்
மிருகமென்று சொல்லி
மிருகங்களையும்
அவமானப்படுத்த வேண்டாம்
மனிதா! நீ மனிதனாக இரு!
காலம் இன்னமும் காத்திருக்கிறது
அமைதியும் சுதந்திரமும் நிறைந்த
அன்பின் உலகம் கண்டு மகிழ!
nice kavidhai
ReplyDelete