நாளை ஒருநாள்
எனக்கு விடுமுறை
இயந்திரவாழ்க்கைக்கு
ஒரு நாள் சுகாமான ஓய்வு
சுகமாக நானுறங்கி விழிக்க
நாளை காலை
கடிகாரத்திற்கும் விடுமுறை
என் அன்பு மனைவியோடு
காலையில் ஆலயதரிசனம்
இறைவனுக்கு என்னிதயம்
நன்றிமலர்களை சமர்ப்பிக்க
தாய்க்கும் பெரியோர்கள்
எல்லோருக்கும் எந்தன்
சிறப்பு வணக்கங்கள்
தள்ளாடும்
எனது தாய் சமைத்த
மதிய உணவு
குடும்பத்தாருடன்
அனாதை/முதியோர் இல்ல
தெய்வங்களோடு
என் மாலைப்பொழுது
தங்களின் நேரத்தை என்னிடம்
முன் குறித்தோருடன்
இரவு-உணவு;
அன்பின் பகிர்தல்!
3/2 அன்றைய
எனது பிறந்தநாள்
மகிழ்ந்து கொண்டிருக்க...
அடடே
விடுமுறை நாள் முடிந்ததே என
வியந்து போவதற்குள் - என்
கண்களை உறக்கம் மூடும்
அடுத்த நாள் காலை
கடிகாரசத்தத்தின் தொந்தரவு கேட்டவுடன்
மீண்டுமெந்தன் கண்கள் மலருமென்ற
நம்பிக்கையுடன்.
//மீண்டுமெந்தன் கண்கள் மலருமென்ற //
ReplyDeleteஇந்த நம்பிக்கையுடன் அத்தனை நாட்களும் நகருகின்றன. விடுமுறை நாள் முடிவில் இன்னும் சற்று விசேஷமாய்..அதீத நம்பிக்கையுடன் அடுத்த ஆறு நாள் கழித்து வரவிருக்கும் விடுமுறையையும் ஒரு கணம் நினைத்து:)!
Dear Sir,
ReplyDeleteThis poem is very beautiful and it normally reflects the life of everyone.
regards
Sukuna R