என் இனிய நண்பர்களே,
உணர்வுகளை வெளிப்படுத்த எழுத ஆரம்பிக்கும் காலம், சில நேசர்களுடைய பாராட்டுக்கள் பெற்றதும் மீண்டும் மீண்டும் எழுதத் துடிப்பு. எழுதியவைகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஆகா! இதையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன, என்ற முயற்சி! முதல் குழந்தையை காணத் துடிக்கும் ஒரு பாசத்தின் பரிதவிப்பு. புத்தகம் வந்ததும் அட! நாமும் ஒரு புத்தகத்திற்கு ஆசிரியர் என்ற பெருமை! இதற்குள் மிக நெருங்கின அறிஞர்கள் சிலர் தங்களின் பார்வைகளில் பட்ட திருத்தங்களை இனிப்பு பூசின நல்மருந்துகளாக்கின அன்பளிப்பு! மூத்தவர்களின் படைப்புகளை பல்வேறு விமர்சனங்கள் கிழி கிழியென்று கிழிக்கும்போது வியப்பு, பயம். இருப்பினும் மீண்டும் எழுத ஓர் உந்துதல், ஆனால் அதன் வேகம் அப்போது குறையும். மருத்துவம் தந்த அறிஞர்கள் தங்களுடைய மனதிற்குள் இதைக் கண்டு பாராட்டுவார்கள். ஆனால் அடுத்த தொகுப்பிற்காக காத்திருப்பார்கள். இப்படியாக சில கவிதைத்தொகுப்புகள் வெளியிட்ட பின்னர் போதுமடா என்றிருக்க, "இன்று" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி என் நண்பரும் சகோதருமான அழகி டாட் காம் நிறுவனர், திரு பா. விஸ்வநாதனிடம் காட்டினேன். அவர் அந்த கவிதையை வாசித்து, ரசித்து, உண்மையான தனது பாராட்டுககளை தெரிவித்தது மட்டுமன்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த கவிதையை அனுப்பி என் நண்பன், திரு என் சுரேஷின் இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள் என்றார். அந்த கூட்டத்தில் பலர் தமிழ் மொழியை நன்கு கற்றவர்க்ள், அறிஞர் பெருமக்கள். சிலர் பின்னூட்டமிட்டும் மற்றவர்கள் தொலைபேசியில் அழைத்தும் பாராட்டினார்கள். கவிதையை இன்னமும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஒரு நல்ல ரசிகனாக இருந்துபோகிறேன் என்ற எனது நிலைபாடு தவறென்றார்கள் அறிஞர்கள் பலர். பாதைப்போட்டுக்கொண்டே பயனமிடு என்றார்கள் சிலர்.
கவிதைகளை எழுதுவது என்பது எனக்கு முதலிரவின் முதல் இன்பம் போன்றது. ஆனால் கவிதைத்தொகுப்பு புத்தகமாக வெளிவர ஒவ்வொன்றும் தலைப்பிரசவம். அப்படியாக இதோ எனது அடுத்த கவிதைத் தொகுப்பு - " பொன்மாலைப் பொழுது" நேற்று பிறந்துள்ளது. எனது கவிதைகளை மிகவும் ரசித்து வாசிக்கும் சில முதியோர் இல்லத்து தெய்வங்களுக்கும், ஆனாதை விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவச் செல்வங்களுக்கும், எனக்கு ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத அறிவுரை கூறிவரும் எனது சகோதரர்கள் திரு. ஆல்பர்ட், திரு. சக்தி சக்திதாசன், திரு. பா. விஸ்வநாதன் திரு ஆசிப் மீரான் ஆகியோருக்கும் எனது நன்றிகள் பல! எனது தமிழ் ஆசிரியர் திரு. கே இராஜேந்திரன் ஐயாவிற்கும் வெளியீட்டாளர்களுக்கும் இதை தொகுப்பு செய்து உதவிய தம்பி சுந்தர் அவர்களுக்கும், அச்சகத்தில் எனக்காக வியர்வை சிந்திய என் ஏழையின சகோதர சகோதரிகளுக்கும் நான் நன்றி பாராட்டி மகிழ்கிறேன். பணம் இருக்கும் திமிரில் புத்த்கமா எழுதித் தள்ளுகிறான் இவன் என்று என் வங்கிக் கணக்கு பார்க்காமல் என்னை கோடீஸ்வரனாக்கும் சில அறிவுஜீவிகளுக்கும் நான் நன்றி சொல்கிறேன். என்னைப் பற்றின் சில அறியாமை சிலரிடம் அப்படியே இருந்துபோவதில் சில நன்மைகள் இருக்கத் தானே செய்கிறது! இந்த புத்தகத்தை "எனது எல்லா புத்தகங்களையும் வாசித்து வெற்றியடையச் செய்த வாசகர்களுக்கு" நன்றியோடு சமர்ப்பணம் செய்துள்ளேன். இந்த புத்தகம் திருமகள் நிலையத்தார் வெளியிட்டுள்ளார்கள், இந்த புத்தகம் உலகெங்கும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் ஏறத்தாழ எல்லா கடைகளில் கிடைக்கும்.
தோழமையுடன் என் சுரேஷ்
வாழ்த்துக்கள் நண்பரே :)
ReplyDelete//ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி கவிதைத் தொகுப்பாக இருக்கக்கூடும். //
இந்த வரிகள் வேண்டாமே..
நிச்சயமாக நீங்கள் இன்னும் கவிதைத் தொகுப்புக்கள் வெளியிடுவீர்கள் நண்பரே :)
தொகுப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா,
ReplyDeleteஸ்ரீஷிவ்...அசாமிலிருந்து
அன்பின் சுரேஷ்,
ReplyDeleteஇன்னும் ஒரு கவிதை தொகுப்பா??..வாவ்...வாழ்த்துகள்!!
ஊருக்கு வரும்போது எல்லா தொகுப்பையும் வாங்கிப் படிச்சுடறேன்...ஒகேவா?? :)
அன்புடன்...
மல்லிகை
வாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteஇது போல பல தொகுப்புக்களை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்
இங்கையில் உங்கள் புத்தகம் கிடைக்குமா தெரியவில்லை கிடைத்ததால் நல்ல கவிகள் படித்த ஆறுதல் கிடைக்கும்
" பொன்மாலைப் பொழுது" க்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடன் அருணா
அன்பின் சுரேஷ்
ReplyDeleteநல் வாழ்த்துகள் நண்பா
இன்னும் பலப்பல தொகுப்புகள் வழங்க வாழ்த்துகள்
கர்த்தர் / அல்லா / பகவான் அனைவரும் கருணை மழையுடன் சுரேஷுக்கு அருளாசி வழங்குவர்
வாழ்க - தருக பல படைப்புகளை
வாழ்த்துகள் சுரேஷ், கடைசி கவிதைத் தொகுப்பு என்றில்லாமல் மேன்மேலும் கவிதைத் தொகுப்புகளை அளிக்கவும் வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்கள் இன்னமும் பலப்பல பாக்களையும் புத்தகங்களையும் பிரசவிக்க வாழ்த்துகள்
ReplyDeleteபூங்குழலி
Congratulations Suresh.
ReplyDeleteThodarthu ezhuthavum
veliyidavum vaazhthukkal
Nice intruduction about ur book. i think kavithaikal nerthiyaga irukkum entru nambukeren. vaalthukkal. kalyan. kalyanje.blogspot.com
ReplyDeletekalyangii@gmail.com
வாழ்த்து தெரிவித்த எல்லா அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள் பல.
ReplyDeleteஇறைவன் உங்களை ஆசீர்வதிக்க எனது பிரார்த்தனைகள்.
பாசமுடன் என் சுரேஷ்
அன்பின் சுரேஷ்
ReplyDeleteசமீபத்தில் பி.எச்.அப்துல் ஹமீது அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, 'எதையும்
உங்களது மனோபாவத்திலிருந்து மட்டும் பார்க்காதீர்கள். குறையை மட்டும்
பார்த்துக்கொண்டிருந்தால் அல்லது
உங்களது ரசனையோடு மற்றவரக்ளது ஒத்துப் போகாமலிருந்தால் அதற்காக அவர்களைக் குறை
சொல்லாதீர்கள்.
எல்லோரிடமும் நன்மையும் தீமையும் கலந்து இருக்கிறது. நன்மையை மட்டும்
பார்த்துக்க்கொண்டால் குறைகள் ஏதும் தெரியாது. சமயங்களில் சில சில்லறைத்தனங்கள்
கோபம் வரவழைக்கத்தான் செய்யும். புன்முறுவலோடு கடந்து விடுங்கள்' என்று
சொன்னார்.
வாழ்க்கையைப் புன்முறுவலோடு கடந்து செல்பவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள்
கவிதைகள் இன்னும் சிறக்க வேண்டுமென்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் எனக்கேற்ற கவிதைகளை எழுதச் சொல்லி உங்களை நான் வற்புறுத்த இயலாது. உங்கள்
பாணியில் உங்களுக்குத் தெரிந்த மொழியில் உங்களை ரசிப்பவர்களுக்காகத் தொடர்ந்து
நீங்கள் எழுதத்தான் வேண்டும்
எல்லாரையும் எல்லாராலும் திருப்திப்படுத்துவதென்பது எப்போதும் நிகழ முடியாதது
எனவே இதுவே கடைசி தொகுப்பு என்றெல்லாம் கதை சொல்லாமல் தொடர்ந்தும் நீங்கள்
எழுதுங்கள்
நீங்கள் நம்பும் இறை உங்க்ளுக்குத் துணை இருக்கட்டும்
நட்புடன்
ஆசிப் மீரான்
நண்பர் சுரேஷுக்கு மகிழ்வான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னும் பல நூல்களை எழுதி சிறக்க வாழ்த்துகள்.
ராஜா
அன்புடன் சகோதரர் சுரேஎஷ் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteஆடிய காலும் பாடிய வாயும் மட்டுமல்ல எழுதிய கையும் சும்மா இருக்காது.
உங்களுக்கென்று ஒரு பார்வைக் கோணமும் கருத்துகளும் கோர்வையாக வரும் போது
நிச்சயம் எழுதிக் கொண்டே இருப்பீர்கள்...
வாழ்த்துகள்!
அன்புடன்
சுவாதி
அன்புடன் சகோதரர் சுரேஎஷ் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteஆடிய காலும் பாடிய வாயும் மட்டுமல்ல எழுதிய கையும் சும்மா இருக்காது.
உங்களுக்கென்று ஒரு பார்வைக் கோணமும் கருத்துகளும் கோர்வையாக வரும் போது
நிச்சயம் எழுதிக் கொண்டே இருப்பீர்கள்...
வாழ்த்துகள்!
அன்புடன்
சுவாதி
அன்புள்ள அண்ணா,
ReplyDeleteநான் எழுதுவது அனைத்தும் எனது மனதின் பாதிப்புகளே! அதை எழுதி முடிக்கையில்
என்க்கு ஒரு அமைதி/மகிழ்ச்சி கிடைக்கிறது. அப்படியிருக்க புத்தக
வெளியிட்டாளர்கள் ரசனைக்கு இவைகள் அமைந்திட விற்பனை சிறந்திட சில புத்தகங்கள்
வெளிவந்தன.
இனி ஏன் எழுதவேண்டும் என்ற சிந்தனைக்கு பதில் தந்து ஊக்கப்படுத்தின உங்கள்
பாசத்திற்கு என உள்ளம் நிறைந்த நன்றியை அன்போடு தெரிவிக்கிறேன்.
இறைவன் கிருபை படி எல்லாம் இனிதாய் நடக்கட்டும்.
பாசமுடன் என் சுரேஷ்
ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி கவிதைத் தொகுப்பாக இருக்கக்கூடும்
ReplyDeleteஇப்படி நீங்க பேசுறதே தப்பு அண்ணா... தம்பி என்ற முறையில் எனக்கு இதை
தட்டிகேட்க உரிமை உண்டு என்பதால் எழுதுகிறேன்.. மேலும் பல கவிதை தொகுப்புகள்
வெளிவர வேண்டும் என்பதே என் ஆசை... அதற்கு எல்லாம் வல்ல இறை சக்தி வழி
வகுக்கும்
--
அன்புடன்
சிவா...
அன்பின் சுரேஷ்.. உங்களுடைய மீண்டும் மீண்டும் உலகில் உள்ள அனைத்து
ReplyDeleteதமிழர்களின் கைகளிலும் தவழ்ந்து மேலும் மேலும் பல படைப்புகளை படைக்கவும்
எல்லாம் வல்ல இறைவனை தினமும் வேண்டுகிறேன்..
உங்களுடைய புத்தகம் எங்களூரின் தமிழ் கடைக்கு வந்தடையும் நாளை வழிமேல் விழி
வைத்துக் காத்திருக்கிறேன்..
வாழ்த்துக்கள்..
தஞ்சை ராஜா
அன்புத் தம்பி சுரேஷ்
ReplyDeleteஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் நூல்கள் நீ படைக்க
இஒய்வாக நான் ரசித்தே அதைப் படிக்க
ஓங்காரமாய் இருக்கு இறை எனக்கு
ஒரு நீண்ட வாழ்வு தர வேண்டும்
தொடர்ந்து எழுதி
தமிழுலகில் ஒளிவீசிப் பிரகாசிக்க
அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
வாழ்த்துக்கள், சுரேஷ்! மேலும் பல புத்தகங்கள் வெளியிடவும் மனமார்ந்த
ReplyDeleteவாழ்த்துக்கள்!
--
கவிநயா
வாழ்த்துக்கள் என்.சுரேஷ் அண்ணா.
ReplyDeleteநீங்கள் நூறு புத்தகம் எழுத வேண்டும்.
அனைத்தையும் முதல்நாளிலேயே வாங்கிவிடுவேன்.
இன்று மாலை இப்புத்தகம் என் கையிலிருக்கும்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ். அடுத்த புத்தகக் கண்காட்சியில் கண்டிப்பாக வாங்கிடுவேன்.
ReplyDelete****//எம்.ரிஷான் ஷெரீப் said...
வாழ்த்துக்கள் நண்பரே :)
//ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி கவிதைத் தொகுப்பாக இருக்கக்கூடும். //
இந்த வரிகள் வேண்டாமே..
நிச்சயமாக நீங்கள் இன்னும் கவிதைத் தொகுப்புக்கள் வெளியிடுவீர்கள் நண்பரே :)//****
ரிஷான் சொல்வது எத்தனை சரி. 'பொன் மாலைப் பொழுது'கள் அடுத்து வரும் அஸ்தமனத்துக்காக அல்ல. புலரப் போகும் 'புத்தம் புது காலை பொன்னிற வேளை'களுக்காகவும்தான் நண்பரே!