Monday, April 28, 2008

இதில் உங்கள் கருத்தென்ன????????

தம்பியின் வீடு செல்ல காத்திருக்கும் ஏழை அக்கா!

மகளோடு சேர்ந்து மகனின் இல்லம் செல்ல காத்திருக்கும் வயதான ஏழைத்தாய்!

வருடத்தில் என்றாவது தம்பி வீடு சென்று எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு வீடு திரும்ப ஆசைப்படும் மாமா மற்றும் கல்லூரியில் படிக்கும் இரண்டு மருமகள்கள்.

ஊரிலிருந்து தூரத்து உறவொன்று தம்பியின் வீட்டில் வந்திருக்கிறார்கள்.

இறந்து போன தந்தையின் உருவத்திலும் பாசத்திலும் அமைந்த அந்த பாச உறவை தங்கள் வீட்டில் சில நொடிகள் மட்டுமே பார்த்துப் பேசினது போதாது என்ற ஆசையில் தம்பியின் வீடு சென்று அவர்களையும் பார்த்து வர காத்திருக்கும் இந்த ஐந்து ஏழை மக்களின் நான்கு நாள் ஆசை, அடுத்த நாள் விடியலுக்கு காத்திருக்கும் நேரத்தில்....

தம்பியின் மனைவி, வீட்டிற்கு வந்திருக்கும் சொந்தங்களை காலையிலேயே கோவிலுக்கு அழைத்துச் செல்ல திடீரென்ற அடம் பிடித்தல்!

காலையில் வீடு வர காத்திருக்கும் ஏழைமக்களை மதியம் வந்தால் போதுமென்று சொல்லுங்கள் என்ற கட்டளை!

அந்த ஏழைகளின் வீட்டிற்கு சென்று பலவருடங்களாக அடிக்கடி சென்று உண்டு, தங்கி வந்ததை வசதியோடு தம்பியின் மனைவி மறந்து விட்ட கொடுமை!

உறவுகளுக்கு முன் ஏன் அழுக்கான சண்டைகள் என்ற அறிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வண்ணம் மன்னிப்பதில் சந்தோஷம் கண்டு மனைவியின் ஆசைப்படி வீடு வந்த உறவுகளள மனைவியோடு கோவிலுக்கு அனுப்புகிறான் தம்பி!

உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, தம்பி அந்த ஏழை சொந்தங்களிடம்
"வரவேண்டாம்" என்று சொல்லும் கொடுமையான நிர்பந்தத்தை கண்ணீரின்றி அழுது நிறைவேற்றினாலும், அந்த ஏழைகள் அவர்களுடைய கவலையின் மௌன உச்சத்தை கண்ணீரில் அல்லாமல் எப்படி தீர்த்துக்கொள்ள முடியும்?

இது தானா பக்தி என்று இறைவன் சிரிக்கலாம்!

இதை மாபெரும் முட்டாள்த்தனம் என்று நாத்திக சகோதரர்கள் சொல்லக்கூடும்!

என்ன செய்ய என்ற மனநிலையில் ஊரிலிருந்து வந்த சொந்தங்கள்!

சில கஷ்ட்டங்களை அனுபவத்துத் தான் ஆகவேண்டுமென்று அந்த தம்பி!

நான் சொல்வதும் எனது பக்தியும் தான் சரி என்கிறாள், தம்பியின் மனைவி!

இப்படியுமா ஒருவள் என்று அந்த ஏழைகளின் கண்ணீர்!

இதில் உங்கள் கருத்தென்ன????????

2 comments:

  1. Anonymous7:31 PM

    மிகச் சுலபமான ஒரு வழியில் கண்ணீரில்லாமல் தீர்த்திருக்கக் கூடிய பிரச்சினைதான்...அந்த ஏழைகளின் வருகைக்குப் பின்பு உறவினர்களுடன் சேர்ந்து அனைவரும் ஒன்றாய் கோவிலுக்குப் போயிருக்கலாமே??

    anbudan aruna

    ReplyDelete
  2. அன்புள்ள அருணா,

    குடும்பமாக எல்லோரும் தம்பியின் வீட்டிலிருக்க இடமிட்ட ஆசையான திட்டமிது, என் செய்ய?


    என் சுரேஷ்

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...