Wednesday, April 2, 2008

தோழமையுடன் ஆன்மீகம்!


உலகின் எல்லாப் போர்களும் இருவர்களின் சண்டையில் தான் உருவானது.
"நான் தான் சரி" என்ற இருவரின் ஆணவங்கள் மோதிக்கொண்ட சண்டை!

அதனால், உலகின் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டுமென்றும்
இது தான் ஒரு சமாதான உலகை தர இயலும் என்றும் பெரியவர்கள் பலரும் நமக்கு போதித்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டு தவிப்பவர்கள் பொதுவான நியாத்தை முன் வைத்து எதிர்க்கிறார்கள்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் நியாயங்களை பார்க்காமல், நாங்கள் தான் "அறிவளிகள்-உயர்ந்தவர்கள்" என்ற மனப்பான்மை இருப்பவர்கள், உயர்ந்த ஜாதியில் பிறந்து ஜாதி-மத வெறி பிடித்து அலைபவர்கள், அதிகாரம் இருப்போர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் பலர், தங்களை விட எளிமையானவர்களை அடிமைப்படுத்துகிறார்கள்.

பிறகு அதில் மகிழ்வது போல் நடிக்கிறார்கள்.
தனது சொந்த மனசாட்சிகளின் எச்சரிக்கைகளையே ஏளனம் செய்கிறார்கள்!

உண்மையில், மனிதநேயமில்லாத ஒரு மனிதனும் உலகில் இல்லை!

ஒரு விபத்து கண்டால், ஒரு மரணம் கண்டால், ஒரு குழந்தையின் அழுகை போன்றவை கண்டால் ஏன் எல்லோருடைய உள்மனங்களும் அழுகிறது?

மிகக் கொடூரமான இதயங்களிலும் கண்ணீர் வராமல் இல்லை!
அவனின் கொடுமை உணர்வு அந்த கண்ணீரைத் துடைத்து அவனை அடிமைப்படுத்துகிறது!

நமக்கு பழக்கமே இல்லதவர்களின் பிரிவுகளும் ஆபத்துகளும் பற்றின செய்தி நமது காதில் கேட்டாலே நம்மால் அதை தாங்க முடியவில்லையே, ஏன்?

சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களின் கவலைகள் நமக்குள் ஏன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இந்தியா சார்பில் ஒருவர் தங்கமடல் வென்றால், ஆப்ரிக்கா காட்டில் சிங்கத்திடத்திலிருந்து ஒரு நீக்ரோ-சகோதரன் தப்பித்து விட்டான் போன்ற செய்திகள் கேட்டால் ஏன் எல்லோருடைய மனங்களிலும் ஒரு சந்தோஷம் மலர்கிறது?

அடிப்படையில் மனிதனின் மனம் அடுத்த மனிதனோடு அன்போடு இணைக்கப் பட்டிருக்கிறது. அந்த அன்பின் இணைப்பை உணர்த்தப்பட்டு உறுதிசெய்வதே ஆன்மீகம் ! என்பது எனது தாழ்மையான கருத்து!

அன்புடன்
என் சுரேஷ்

4 comments:

  1. Anonymous7:29 PM

    நட்சத்திரப் பதிவுகளை ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  2. ஆன்மீகம் என்ற தலைப்பை இடும்போதே அன்பே வடிவமான எனது சகோதரர் திரு சேவியரை எனது மனம் எதிர்பார்த்தது.

    மிக்க நன்றி சகோதரரே/நண்பரே!

    பாசமுடன் என் சுரேஷ்

    ReplyDelete
  3. முதல் எழுத்து "அ" சொல்வது
    அன்பு
    அனைவரிடமும் அடிப்படை உணர்வு.

    அடுத்த எழுத்து "ஆ" தான் பிரச்சினைகளின் ஆரம்பம்.
    "ஆசை".

    ஆன்மீகம் அதற்கு மருந்தா,வெறும் களிம்பா?

    ReplyDelete
  4. அன்புள்ள நண்பர் தமிழன் ( எனக்கு மிகவும் பிடித்த பெயர்களில் ஒன்று, தமிழன்!)

    உங்களின் இனிய பின்னூட்டத்திற்கு நன்றி.

    "ஆசைகளை எதிர்த்த புத்தருக்கும் ஆசையற்ற ஒரு உலகம் வேண்டுமென்ற ஆசை இருந்தது"

    தோழமையுடன் என் சுரேஷ்

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...