Sunday, April 6, 2008

வாழ்த்துகள்!!!


அன்பு உள்ளங்களே

வணக்கம்!

தமிழ்மணத்தில் நட்சத்திரமாக கடந்த ஒரு வார காலம் என்னை அறிமுகப்படுத்தின தமிழ்மணத்தின் அன்புள்ளம் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பின்னூட்டங்களிட்டு வாழ்த்தின பதிவர்களின் பாசம் நிறைந்த உள்ளங்களுக்கும் மற்றும் வாசகர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளை மிகவும் சந்தோஷத்தோடு சமர்ப்பிக்கிறேன்!

இந்த வலைப்பூவை கடந்த ஒருவார காலம் பாதுகாத்து உதவின என் அன்புத் தம்பிகள் பா. விஸ்வநாதன் & அந்தோணி மற்றும் என் அன்புத் தோழி திருமதி அருணா அவர்களுக்கும் எனது நன்றிகளை அன்போடு சமர்ப்பிக்கிறேன்!

எனது வாழ்வில் இந்த ஒரு வாரம் மிகவும் மகிழ்ச்சியான காலம்!

வாழ்க்கை என்பது மலரும் நினைவுகளை சேகரிப்பது என்று உணர்ந்திருந்தேன், ஆனால் ஒரே வாரத்தில் ஒரு யுகம் முழுக்க சேமிக்கக் கூடிய மகிழ்ச்சியின் நினைவுகள், இந்த நட்சத்திரப் பதிவு காலத்தில் கிடைத்திட, அதீத சந்தோஷத்தில் நான்!

தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரமாக்கி ஊக்கம் செய்தது, 2005 முதல் நான் எழுதி வந்ததற்கு இறைவன் தந்த அங்கீகாரமாக எனது உள்ளம் மகிழ்கிறது!

தொடர்ந்து எழுத இந்த ஊக்கம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்!

வாழ்த்தினவர்களின் அன்பு, என்னை தொலைபேசியிலும் தனிமடலிலும் தொடர்பு கொண்டு பாராட்டினவர்களின் மகிழ்ச்சி, கவிஞர் சக்தி சக்திதாசன் மற்றும் மாமனிதர் திரு வி.கே.டி. பாலன் போன்றோரைப் பற்றி எழுதக் கிடைத்த பாக்கியம், சமுதாயத்தைப் பற்றி இந்த சிறுவன் எனக்கு தோன்றின உண்மைகளைச் சொல்லக் கிடைத்த சுதந்திரம், ஏழை எளிய மக்கள், அனாதை இல்லத்து மழலைச் செல்வங்கள் இவர்களுக்காக எழுத முடிந்ததில் எனக்கு கிடைத்த அகமகிழ்ச்சி, பல புதிய நண்பர்கள் கிடைத்த சந்தோஷம் என எத்தனை உணர்வுகளால் நான் மகிழ்ந்தேன்!

இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகளை சந்தோஷத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

தமிழ்மணத்தின் சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்!

பதிவர்கள் எல்லோரும் தங்களுடைய எழுத்துக்களால் இந்த சமுதாயத்தை, அன்பும் அமைதியும் நிறைந்த ஒன்றாக மாற்ற என் இனிய வாழ்த்துகள்!

தோழமையுடன்
என் சுரேஷ்

4 comments:

  1. வாழ்த்துக்கள்@ நன்றி திரு.சுரேஷ்
    தங்களால் நானும் பல பயனுள்ள,மாமனிதர்களையும் அறிந்து கொள்ள முடிந்தது...

    பதிவர்கள் எல்லோரும் தங்களுடைய எழுத்துக்களால் இந்த சமுதாயத்தை, அன்பும் அமைதியும் நிறைந்த ஒன்றாக மாற்ற என் இனிய வாழ்த்துகள்!

    என் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  2. அன்புள்ள திரு பேரரசன் அவர்களுக்கு,

    உங்கள் இனிமையான பின்னுட்டத்தில் தெரிவித்த நன்றிக்கும் வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

    தொழமையுடன் என் சுரேஷ்

    ReplyDelete
  3. Well done Suresh! That was a wonderful week with nice posts.Keep going!!
    anbudan aruna

    ReplyDelete
  4. மிக்க நன்றி அருணா
    தோழமையுடன் என் சுரேஷ்

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...