அவளை
அடித்துதைத்து தன்னுடலே
வலிக்கத் துவங்கியதும் அவனது
ஆத்திரம் தீர்ந்ததாம்!
உதை வாங்கி வாங்கி விழுந்து
மயக்க நிலையிலினி திட்டித்தீர்க்க
சக்தியோ வார்த்தைகளோயின்றி
வாடிய நிலையில்
பாவமவளின் கவலைகள் தீரவில்லை
அடங்காத ஆத்திரம் மயக்கதிலிருந்து
வெளிவரவில்லை!
அவன் கணவனாம்
அவனின் தாலி அணிந்ததால்
இவள் மனைவியாம்!
இந்த கொடூரம் கண்டு கலங்கி
பயந்து நடுங்கும்
பாவம் குழந்தைகளின் கண்ணீர்
தொடர்ந்து கேட்கும் கேள்வி
" ஏன் பிறந்தோம் "
மேகமூட்டம் கொண்ட அந்த
உணர்ச்சி நொடிகளில்
கூண்டுக்குள் சிறையிடப்பட்ட
பறவைகளைக் கண்டு
பூக்களுக்கு முத்தமிடவந்த
வண்ணத்துப்பூச்சியொன்று
கவலையாய் பறந்து சென்றது!
I felt my heart heavy, after reading this.
ReplyDeleteMost of our Indian, Tamil Womens are reflected in this poetry.
Oh...! God...!
Thambi
Anthony Muthu
////இந்த கொடூரம் கண்டு கலங்கி
ReplyDeleteபயந்து நடுங்கும்
பாவம் குழந்தைகளின் கண்ணீர்////
////பூக்களுக்கு முத்தமிடவந்த
வண்ணத்துப்பூச்சியொன்று
கவலையாய் பறந்து சென்றது!////
அழுகையும்,அழகுணர்ச்சியும் ஒன்றாக சேர்த்து எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ?
அருணா