Wednesday, December 27, 2006

உண்மை நிலை

பேசுவதற்கு முன் யோசி
எழுதுவதற்கு முன் சிந்தனை செய்
செலவு செயவதற்கு முன் சம்பாதித்திடு
விமரசனத்திற்கு முன் பொறுமைகொள்
பிரார்த்தனைக்கு முன் மன்னித்திடு
ராஜினாமாவிற்கு முன் முயற்சி செய்...

இதெல்லாம் சரி தான்- ஆனால்
இன்றைய அவசர வாழ்க்கையில்
பொறுமையாய் சிந்திக்க நேரமின்றி
சம்பாத்தியத்தை மட்டும் தியானித்து
எல்லோரையும் என்றும் மன்னித்து
முயற்சிகள் பலவற்றில் தோல்வியே சந்தித்து
விமர்சனங்களே ஊக்கமென்றுணர்ந்து
பயந்து பயந்து வேலை செய்து
சுமைகளை நினைத்து
சுதந்தைரத்தையும் இழந்து
வாழும்
இயந்திர மனிதனை
நடுங்கவைக்கும் சத்தம்
ராஜினாமா!

Sunday, May 21, 2006

ஒரு கதை

இறைவனிடம் ஒருவனுக்கு பேச பாக்கியம் கிடைத்தது.

அவன் கேட்டான். “இறைவா, ஒரு பத்தாயிரம் வருடங்கள் உங்களுக்கு எவ்வளவு?

இறைவன் சொன்னார், “ ஒரே ஒரு நொடி”

அவனின் அடுத்த கேள்வி “ இறைவா, பத்தாயிரம் கோடி ரூபாய்”?

இறைவன் சொன்னார் “ ஒரு வினாடி காத்திரு" !

தோழமையுடன் ஆன்மீகம்!

உலகின் எல்லாப்போர்களும் இருவர்களின் சண்டையில் தான் உருவானது.

அதனால் உலகின் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். இது தான்
ஒரு சமாதான உலகை தர இயலும்.

ஒடுக்கப்பட்டு தவிப்பவன் எதிர்க்கிறான்.

உயர்வு மனப்பான்மை இருப்பவன், மேல்க்குடி கோடீஸ்வரர்களில் பலர், தன்னை விட எளிமையானனை அடிமைப்படுத்தி மகிழ்வது போல் நடிக்கிறான்.

தனது சொந்த மனசாட்சியின் எச்சரிக்கைகளையே ஏளனம் செய்கிறான்.

உண்மையில், மனிதநேயமில்லாத ஒரு மனிதனும் உலகில் இல்லை!

ஒரு விபத்து கண்டால், ஒரு மரணம் கண்டால், ஒரு குழந்தையின் அழுகை போன்றவை கண்டால் ஏன் எல்லோருடைய உள்மனங்களும் அழுகிறது?

நம்க்கு பழக்கமே இல்லதவர்களின் பிரிவுக்ளும் ஆபத்துகளும் பற்றி காதில் கேட்டாலே நம்மால் தாங்க முடியவில்லையே ஏன்?

சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களின் கவலைகள் நமக்குள் ஏன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இந்தியா சார்பில் ஒருவர் தங்கமடல் வென்றால், ஆப்ரிக்கா காட்டில் சிங்கத்திடத்திலிருந்து ஒரு நீக்ரோ சகோதரன் தப்பித்து விட்டான் போன்ற செய்திகள் கேட்டால் ஏன் எல்லோருடைய மனங்களிலும் ஒரு சந்தோஷம் மலர்கிறது?

அடிப்படையின் மனிதனின் மனம் அடுத்த மனிதனோடு அன்போடு இணைக்கப்படுகிறது. அந்த அன்பின் இணைப்பை உணர்த்தப்பட்டு உறுதிசெய்வதே ஆன்மீகம் ! என்பது எனது தாழ்மையான கருத்து!

தொழமையுடன்
என் சுரேஷ்