உலகின் எல்லாப்போர்களும் இருவர்களின் சண்டையில் தான் உருவானது.
அதனால் உலகின் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். இது தான்
ஒரு சமாதான உலகை தர இயலும்.
ஒடுக்கப்பட்டு தவிப்பவன் எதிர்க்கிறான்.
உயர்வு மனப்பான்மை இருப்பவன், மேல்க்குடி கோடீஸ்வரர்களில் பலர், தன்னை விட எளிமையானனை அடிமைப்படுத்தி மகிழ்வது போல் நடிக்கிறான்.
தனது சொந்த மனசாட்சியின் எச்சரிக்கைகளையே ஏளனம் செய்கிறான்.
உண்மையில், மனிதநேயமில்லாத ஒரு மனிதனும் உலகில் இல்லை!
ஒரு விபத்து கண்டால், ஒரு மரணம் கண்டால், ஒரு குழந்தையின் அழுகை போன்றவை கண்டால் ஏன் எல்லோருடைய உள்மனங்களும் அழுகிறது?
நம்க்கு பழக்கமே இல்லதவர்களின் பிரிவுக்ளும் ஆபத்துகளும் பற்றி காதில் கேட்டாலே நம்மால் தாங்க முடியவில்லையே ஏன்?
சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களின் கவலைகள் நமக்குள் ஏன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது?
இந்தியா சார்பில் ஒருவர் தங்கமடல் வென்றால், ஆப்ரிக்கா காட்டில் சிங்கத்திடத்திலிருந்து ஒரு நீக்ரோ சகோதரன் தப்பித்து விட்டான் போன்ற செய்திகள் கேட்டால் ஏன் எல்லோருடைய மனங்களிலும் ஒரு சந்தோஷம் மலர்கிறது?
அடிப்படையின் மனிதனின் மனம் அடுத்த மனிதனோடு அன்போடு இணைக்கப்படுகிறது. அந்த அன்பின் இணைப்பை உணர்த்தப்பட்டு உறுதிசெய்வதே ஆன்மீகம் ! என்பது எனது தாழ்மையான கருத்து!
தொழமையுடன்
என் சுரேஷ்
அன்பு நண்பரே,
ReplyDeleteமிக அருமையான வலைப்பதிவு.
சமூகத்தின் மீதுள்ள அதீத அக்கறையும் அன்பும், உங்களின் எல்லாப் படைப்புகளிலும் மிளிர்கிறது. வித்தியாசமான உங்களுக்கே உரித்தான நடையில் எழுதுகிறீர்கள். எழுத்தில் சமுதாயத்தை மாற்றவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும் என்ற வேகம் தெரிகிறது. கவிதைகளும் நன்றாக எழுதுகிறீர்கள்.
வலைப்பதிவும் நல்ல முறையில் இருக்கிறது.
மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அன்பு நண்பர் திரு மஞ்சூர் ராசா,
ReplyDeleteஉங்களுடைய கனிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
எனது எழுத்தால் இந்த சமுதாயம் மாறிவிடும் என்ற ஒரு கனவும் என்னிடம் இல்லை.
இருப்பினும் இந்த சிறுவனும் எழுதுக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துகளை ஆசீர்வாதங்களாய் நான் எடுத்துக்கொள்கிறேன்.
நான் வலைப்பூ ஆரம்பித்ததும் அதை இன்னமும் அழகுபடுத்துங்கள் என்று கூறி எனக்கு நீங்கள் தந்த உபதேசங்களை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
தோழமையுடன் - என் சுரேஷ்