Saturday, February 9, 2008

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதையை
பயந்து போய் கொடுத்து
விடத்தான்
கல்லூரியில்
காதலின் தோல்விக் கதைகளை
அப்படி போதித்தார்களோ?

இதயங்களில்
காதலின் கருப்புப் பதாகை
எல்லோரிலும்
மௌனமாய் அழுதுகொண்டிருப்பது
உண்மை தான்

ஆனால்
காதலுக்கு ஒரு போதும்
தோல்வியில்லை - அதன்
வெற்றிக்குத் தான் மரியாதை!

1 comment:

  1. //காதலுக்கு மரியாதையை
    பயந்து போய் கொடுத்து
    விடத்தான்
    கல்லூரியில்
    காதலின் தோல்விக் கதைகளை
    அப்படி போதித்தார்களோ?//

    காதலின் தோல்விக் கதைகளை போதிப்பதற்கு இப்படி ஒரு விளக்கமா? புதுமையாக இருந்தது
    அன்புடன் அருணா

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...