Saturday, February 9, 2008

பீனிக்ஸ்

வார்த்தைகளின் அம்புகளால்
உடைந்தயென் இதயத்தின் துகல்கள்
இரத்தவெள்ளத்தில்
பயணம் செய்துகொண்டிருக்கிறது!

மருந்து கண்டுபிடிக்கப்பட்ட
நோய்களில் அதிகமும்
ஒவ்வொன்றாய்
எனை தாக்க மகிழ்ச்சியுடன்
காத்திருக்கிறது!

இறந்து கொண்டே இருக்கின்ற நான்
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

உண்மை தான்!

பீனிக்ஸ் எனது சீடன் தான்!

1 comment:

  1. //இறந்து கொண்டே இருக்கின்ற நான்
    இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

    உண்மை தான்!

    பீனிக்ஸ் எனது சீடன் தான்!//

    ரொம்ப நன்றாக இருந்தது!! பீனிக்ஸ் பறவை என் குரு என்றல்லவா நான் நினைத்திருந்தேன்!!!உங்கள் சீடனா??
    அன்புடன் அருணா

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...