வேதாந்தமாகின வேதனைகளிட்ட
நிழல்களின் ரேகைகளை
என் காதலியின் முகத்தில் காண
தேடிச்செல்கிறேன்!
வாழ்க்கை பளீரென்று
புன்னகைத்தது!
சொல்லமுடியா உணர்வுகளை
மனம் சுமந்த நிலையில்
என்னில் எத்தனையெத்தனை
ஞாபகங்கள், சிந்தனைகள்!
பயணத்தின் வழியெங்கும்
கடந்தகால சந்தோஷங்களுக்கு
திடமில்லாத சாட்சிகள்!
எதிர்காலத்தை
என்றோ தொலைத்துவிட்ட
கவலையில்
வழியோர மரங்களின்
பச்சைநிழல்களும்!
கதவைத்திறந்தாள்
ஒற்றைப்பார்வையில்
என் மனதையும்!
நான் இன்னொருவளுக்கு
கணவனாகியும்
அவள் மனதின்
காதலனும் கணவனும் -அது
நானே என்றறிந்ததும்
அறிவு கலாச்சாரம் நீதி நியாயம்
இவையெல்லாம்
தோல்வியுடன்
கடலில் கரைந்த நீர்க்குமிழி போல்
கரைந்துபோனதை
மறக்க முடியுமா?
மறைக்க முடியுமா?
அருமை அண்ணா
ReplyDeleteமறக்கமுடியுமா? மறுக்கமுடியுமா? அற்புதம் அண்ணா, இன்னும் எழுதுங்கள்
ஸ்ரீஷிவ்....
அன்பினிய தம்பி,
ReplyDeleteமறுக்க முடியுமா - என்ற ஒரு வரியைக்கூட சேர்த்து பின்னூட்டமிட்ட உங்களூக்கு மிக்க நன்றி