Wednesday, September 5, 2007

நிஜங்களின் கோலங்கள்


அவளையின்று அழைக்க
அடைபட்ட கிளிமொழி
பதற்றமாய் சொன்னது
" அவர் இருக்கார்"....!

உயிர் தோழிக்கா இந்நிலை!
புன்னகையின் பெட்டகம்
சுதந்திரத்தின் விரிந்த சிறகுகளென
எத்தனை வியப்புகளிருந்தது அவளில்..!

தோழியவளின் திருமணமிட்ட வேலியால்
எத்தனையோ வருடங்களாய் இந்நிலையிது
அவனில் பற்றவைத்தது கவலைகளை!

புன்னகையால் மறைத்தாளவள்
அடிமையென்பதை!

பிள்ளைகளால் இருக்கிறது இல்லறம்
என்கிறது நிஜம்!

பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொள்ளும் அவளின் வேதனைகள்!

பெண் சுதந்திரப் போராட்டம்
இவளிலிருந்து இனி என்று ஆரம்பித்து.....!!!!

2 comments:

  1. Hmmmmm (Perumoochu.) You cant do much about such women sir. They are in such position wantedly quoting some excuses (like children etc). If they want out, they can be out. But, they dont want out. Thats the bottomline. They get used to it and often one of the factors in their thinking/deciding is that a known devil is better than unknown angel :-) - PK Sivakumar

    ReplyDelete
  2. பின்னூட்டமிட்ட திரு சிவகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி...

    ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் இன்றும் பெண்களுக்கில்லை என்பதோர் நிதர்சனமான உண்மை.

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...