Monday, March 5, 2007

மேகக்கூட்டம்

கவிதையா?
நான்கு வரிகளிலென்றால்.. சரி!

சிறுகதையா?
துணுக்கின் படிவமென்றால்.. சரி!

நோவல்?
நேரமேயில்லை!

பாடல்?
நல்லிசையோடிருந்தால் - அல்லது
இசை பாடலை ஆக்கிரமத்தால்!

என்னாதான் வேண்டும்?
ஒன்றும் வேண்டாம்
எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
அதுவே இலக்கணத்தின் உச்சம்!

ஒரு சமுதாயம் முன்னேறவும்
அழியவும் சினிமாவும் காரணமா !!!

இந்த கால சினிமா
முன்வைக்கும்
வன்முறையும் ஆடையில்லா ஆட்டமும் - என்
கண்முன்னே ஓடி வர...

கோபத்தாலென் இமைகளை
இழுத்தி மூடினது கண்கள்

என் மனத்திரையில்
ஆஸ்திரேலிய காடுகள்
எரிந்துகொண்டிருக்கின்றன...

சினிமா சுருள்களை நானந்த
நெருப்பிலிட்டு மகிழ்கிறேன்

மஞ்சள் புகையும் சிவப்பு புகையும் பொங்கி வர
வெட்கத்துடனும் பயத்துடனும்
விரண்டோடுகிறது மேகக்கூட்டம்!

1 comment:

  1. /என்னாதான் வேண்டும்?
    ஒன்றும் வேண்டாம்
    எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
    அதுவே இலக்கணத்தின் உச்சம்! /

    வரிகளின் அமைப்பு அருமையாக இருக்கிறது. நல்ல கவிதை. பாரட்டுக்கள்.

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...